First aircraft purchase agreement signed between GIFT city-based Vman Aviation & Airbus Helicopters under the Atmanirbhar Bharat Abhiyan
Today marked another significant day in the history of Indian aviation industry with the signing of first aircraft purchase order by a GIFT city (Gujarat International Finance Tec) based leasing company under the Atmanirbhar Bharat Abhiyan of the Government of India.
Shri Pradeep Singh Kharola, Secretary, Ministry of Civil Aviation (MOCA) presided over the signing of the purchase agreement between Vman Aviation, GIFT City, Gandhinagar and Airbus Helicopters SAS (Marignane, France) in an event held today at the Rajiv Gandhi Bhawan, New Delhi. Shri VishokMansingh, CEO, Vman and Mr. Remi Maillard, President, Airbus India and Managing Director, South Asia region signed the agreement. Shri Sanjeev Kumar, Chairman AAI and Shri Amber Dubey, Joint Secretary, MoCA along with other senior officials were present during the signing agreement.
Congratulating both the companies, Shri Pradeep Singh Kharola, Secretary, MoCA said, “The aircraft purchase signing is a landmark event in the Indian aviation history. This agreement is the result of the efforts put in for the last 4-5 years to create a viable leasing & financing ecosystem in the country. This is a new business segment coming to India and the Government of India shall continue to provide all possible help to promote leasing activities in India under the Atmanirbhar Bharat Abhiyan.”
Under the Atman NirbharAbhiyan, GIFT IFSC, with various incentives from the government of India and low set up costs, has become very attractive for lessors. They can leverage the fast growing civil and military aviation market in India and abroad.
MONIKA
கிப்ட் சிட்டியைச் சேர்ந்த வி-மேன் நிறுவனம் சார்பில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏர்பஸ் நிறுவன ஹெலிகாப்டர்கள் வாங்க முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய விமானத் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்று குஜராத் கிப்ட் சிட்டியைச் சேர்ந்த விமான ஏல நிறுவனம் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முதல் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
டெல்லி ராஜிவ் காந்தி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு.சிங் கரோலா தலைமையேற்றார். இதில், விமேன் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷோக்மான் திரு.சிங், ஏர் பஸ் இந்திய பிரிவுத் தலைவர் திரு.ரெமி மெயிலார்ட் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய விமானப் போக்குவரத்து ஆணையரக தலைவர் திரு.சஞ்சீவ் குமார், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் திரு.அம்பர் தூபே மற்றும் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. பிரதீப் சிங் கரோலா கூறும்போது, “இரண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விமான ஒப்பந்தம், இந்திய விமானப் போக்குவரத்து துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் லாபகரமான விமான ஏல மற்றும் நிதி வணிகத்தை ஊக்குவிக்க கடந்த 4-5 ஆண்டுகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விமான ஏலம் இந்தியாவுக்கு புதிதாக வரும் வணிகம். தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி இதனை வளர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்” என்றார்.
தற்சார்பு இந்தியா திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் ஏராளமான சலுகைகள் மற்றும் குறைந்த செலவில் தொழில் தொடங்கும் சூழல் காரணமாக குஜராத் கிப்ட் சிட்டி ஏல நிறுவனங்களைக் கவர்கிறது. இந்நிறுவனங்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேகமாக வளர்ந்து வரும் பயணிகள் விமானப் போக்குவரத்து துறை மற்றும் ராணுவ விமானப் போக்குவரத்து துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொழிலை வளர்க்க முடியும்.
0 Comments
IF YOU HAVE ANY DOUBTS, PLEASE LET ME KNOW